• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக 7 ரூபாய் குறைத்த கர்நாடகா, புதுவை அரசுகள்!

பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக 7 ரூபாய் குறைத்த கர்நாடகா, புதுவை அரசுகள்!

Petrol

Petrol

பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

  • Share this:
தீபாவளி பண்டிகை பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையில் 7 ரூபாய் குறைத்துள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதமாகவே விண்ணை முட்டும் வகையில் தொடர்ந்து உயர்ந்து வந்தது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 120 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டன இந்த விலை உயர்வு சாமானிய மக்களை வெகுவாக பாதித்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்தது. பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசல் விலையில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

சென்னையில் நேற்று 106.76 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை இன்று 101.40 ரூபாயாக குறைந்திருக்கிறது. இதே போல நேற்று டீசல் விலை லிட்டருக்கு 102.69 ரூபாயாக இருந்தது, அது இன்று 11 ரூபாய் அளவுக்கு குறைந்து 91.43 ரூபாயாக குறைந்திருக்கிறது.

Also read:  பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்புக்கு பின் இன்றயை (நவம்பர் 4) விலை நிலவரம்!

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சாதனை அளவுக்கு அதிகரித்து வந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் கலால் வரியை அதிரடியாக குறைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளது பொதுமக்களிடையே மிகுந்த சந்தோஷத்தையும், பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறது.

கர்நாடகாவில்  விலை குறைப்பு:

மத்திய அரசை பின்பற்றி மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை 7 ரூபாய் குறைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் 2100 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டாலும், பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். விலை குறைப்பு இன்று மாலை முதல் அமலுக்கு வருகிறது.

Also read:    ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்…

கர்நாடகாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 95.90 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 81.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Basavaraj bommai - Rangasamy


புதுவையில் அதிரடி:

புதுச்சேரி அரசும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 7 ரூபாய் குறைத்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், புதுச்சேரி மாநில அரசு சார்பிலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ஏழு ரூபாய் குறைத்துள்ளது.

புதுச்சேரி அரசின் இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த வரி குறைப்பானது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பெரும் வகையில் தீபாவளி பரிசாக அமையும். கொரோனா தொற்றால் முடங்கிக் கிடக்கும் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி புத்துணர்ச்சி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: