• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலா.. பாமக மாவட்ட செயலாளர் கொலையில் திடீர் திருப்பம்

எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலா.. பாமக மாவட்ட செயலாளர் கொலையில் திடீர் திருப்பம்

பாமக பிரமுகர் கொலையில் கைதானவர்

பாமக பிரமுகர் கொலையில் கைதானவர்

காரைக்காலில் பாமக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கொலை வழக்கில் நான்கு பேரை கைது செய்துள்ளனர். 

காரைக்கால் பா.ம.க மாவட்ட செயலாளர் தேவமணி (வயது 51). இவர் கடந்த 22 ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தவமணியின் உதவியாளராக இருந்த காரைக்காலைச் சேர்ந்த மணிமாறன் (வயது 30) கைது செய்யப்பட்டார். திருநள்ளாறு சேர்ந்த தமிழக அரசின் ஓய்வு பெற்ற  உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி (59), மயிலாடுதுறையை சேர்ந்த ராமச்சந்திரன் (54) அருண் (31) ஆகிய 4 பேரையும் திருநள்ளார் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், காரைக்கால் தேனூரில் தனக்கு சொந்தமான 40 லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை தேவமணி மணிமாறனுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அங்கு டீக்கடை வைத்திருந்த மணிமாறன்  நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேவமணிக்கு  எதிரான குழுவினரிடம் சேர்ந்துவிட்டார். இதனால் தன்னுடைய இடத்தை தேவமணி  திரும்பக் கேட்க  மணிமாறன் திரும்பத்தராமல் பிரச்சனையாக்கினார். இது காவல் நிலையம் வரை சென்று இடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Also Read:  மாமியாருடன் கள்ளத்தொடர்பு.. கார் விற்பனையாளரை அடித்துக்கொன்ற மருமகன் கைது

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதேபோல் தேவமணி வீட்டுக்கு அருகே குடியிருக்கும் திருநள்ளாறு சேர்ந்த தமிழக காவல் துறையில் விருப்ப ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கலியமூர்த்திக்கும் தேவமணிக்கு  இடப்பிரச்சினையில் முன்விரோதம் இருந்தது. இதனால் மணிமாறனும் கலியமூர்த்தியும் ஒன்று சேர்ந்து தேவமணியை கொலை செய்ய திட்டமிட்டனர். அவரை கொலை செய்வதற்கு ஓராண்டாக இவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். தேவமணி எப்பொழுதும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் இருந்ததால் அவரைக் கொலை செய்வதற்கு காத்திருந்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை சேர்ந்த ராமச்சந்திரன் மூலம் கூலிப்படையை ஏற்பாடு செய்து கொலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மணிமாறன், கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அருணா ஆகியோர் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள  கூலிப்படையை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமியிடம் காரைக்கால் எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.

Also Read: சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் மதுபோதையில் இளம்பெண்கள் ரகளை

இந்த நிலையில் காரைக்கால் பாமக  தேவமணி கொலை வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தால் சரியான நியாயம் கிடைக்காது. சிபிஐ விசாரிக்க புதுச்சேரி  அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமியை  சட்டப்பேரவையில் அவரது அலுவலகத்தில் சந்தித்து  காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், பி .ஆர் .சிவா மற்றும் புதுச்சேரியின் சுயேட்சை எம்எல்ஏ நேரு, பிரகாஷ் குமார், ஆகியோர் மனு அளித்தனர்.

அதே வேளையில்  கொலை நகரமாக புதுச்சேரி  மாறி வருவதாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.புதுச்சேரியில் முதல்வராக ரங்கசாமி எப்போது எல்லாம் பதவி ஏற்கிறாரோ அப்போது எல்லாம் ரவுடியிசம் தலைதூக்கி வருகிறது.தற்போது பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசில் புதுச்சேரி கொலை நகரமாக மாறி வருவதாக என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: