• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஜிப்மருக்கு மிக அவசரமின்றி வர வேண்டாம்: மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தல்

ஜிப்மருக்கு மிக அவசரமின்றி வர வேண்டாம்: மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தல்

ஜிப்மர்

ஜிப்மர்

சிறிய மருத்துவ உதவிக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் எதிரொலியாக ஜிப்மருக்கு மிக அவசரமின்றி வர வேண்டாம் என ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஜிப்மர்  மருத்துவ நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஜிப்மர் போன்ற பெரிய மருத்துவமனையில் நாளொன்றுக்கு 8000 முதல்10000 வரை நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இவர்களுடன் கொரோனா  தொற்றால் பாதித்துள்ள நோயாளிகளும் கலந்து இருக்க வாய்ப்புள்ளது.

இதனால் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. அதனால் சிறிய மருத்துவ உதவிக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்றும் கூட்டநெரிசல் மிகுந்த மருத்துவமனை வளாகங்களில்  கொரோனா கிருமிகள் தொற்று அபாயம்  அதிகப்படியாக இருக்கும் என்பதை பொதுமக்கள் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் ஜிப்மர் நிர்வாகம்  எச்சரித்துள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: