ஜிப்மர் மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழ் முறைகேடு? கல்வியாளர்கள் சந்தேகம்

தேசிய அளவில் நடந்த ஜிப்மர் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 26-ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைபெற்றதது. இதில் பங்கேற்க 350 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 110 பேர் பங்கேற்கவில்லை.

Web Desk | news18
Updated: July 5, 2019, 9:16 PM IST
ஜிப்மர் மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழ் முறைகேடு? கல்வியாளர்கள் சந்தேகம்
ஜிப்மர்
Web Desk | news18
Updated: July 5, 2019, 9:16 PM IST
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் படிப்பில் போலி சான்றிதழ் மூலம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் MBBS பட்டப்படிப்பிற்கு 200 இடங்கள் உள்ளன. இதில் 55 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கும் புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டுமே இந்த இடங்களை ஒதுக்குவது வழக்கம். இந்நிலையில், இம்முறை வெளிமாநில மாணவர்கள் பலர் புதுச்சேரி மாணவர்கள் என விண்ணப்பித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தேசிய அளவில் நடந்த ஜிப்மர் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 26-ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைபெற்றதது. இதில் பங்கேற்க 350 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 110 பேர் பங்கேற்கவில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர 60 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால் புதுச்சேரி குடியிருப்பு சான்றிதழை போலியாக பெற்று, ஜிப்மரில் சேரும் நோக்கில் சிலர் செயல்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

தேசிய அளவில் புகழ்பெற்றுள்ள ஜிப்மரில் தகுதியின் அடிப்படையிலேயே MBBS பட்டப்படிப்பில் மாணவர்கள் பயன்று வந்துள்ளனர் என நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை உறுதி செய்யவும், 110 மாணவர்கள் ஏன் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என்பதை அறியவும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also watch:  பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமா?

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...