• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்

புதுச்சேரியில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்

வாக்குப் பதிவு இயந்திரம்

வாக்குப் பதிவு இயந்திரம்

புதுச்சேரி வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

  • Share this:
    புதுச்சேரி வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தலுக்காக முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.

    அந்த வகையில், புதுச்சேரியில் 30 தொகுதிகளிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி லாஸ்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    1,558 வாக்குசாவடிகளுக்கு தேவையான 1,558 வாக்குபதிவு எந்திரமும், 1,558 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் (விவிபேட்) பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

    புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை நிறைவடைந்தது. அங்கே திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. இதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன.

    Must Read :  கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

     

    புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: