கொரோனா பாதித்த கிராமத்திற்கு சீல்... அறுவடை செய்ய முடியாமல் பழுத்து காய்ந்து போகும் மிளகாய்...!

கொரோனா பாதித்த கிராமத்திற்கு சீல்... அறுவடை செய்ய முடியாமல் பழுத்து காய்ந்து போகும் மிளகாய்...!
வேதனையில் விவசாயி
  • Share this:
கொரோனா பாதிப்பு காரணமாக சீல் வைக்கப்பட்டுள்ள  கிராமத்தில்அறுவடை செய்ய முடியாமல் பழுத்து காய்ந்து போகும் மிளகாய்களை கண்டு விவசாயிகள் வேதனையடைந்துள்ள்னர்.

கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிறுனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. விவசாயத்தொழிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் சில கிராமங்களில் விவசாயிகள் உரிய பாதுகாப்புடன் விவசாயம் செய்து வருகின்றனர்.

காட்டேரிக்குப்பம் கிராமத்தில் 7 ஏக்கரில் சொட்டு நீர் பாசனத்தில்  பயிரிடப்பட்ட மிளகாய் அறுவடைக்கு தயாராகியும் பறிக்க ஆட்கள் வரவில்லை. காரணம் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வயல் வெளியில் வேலைக்கு ஆட்கள் வர தடை விதிக்கப்பட்டது.


குடும்ப உறுப்பினர்களை கொண்டு மிளகாயை பறித்தாலும் வெளியே எடுத்து செல்ல முடியாது. இதனால் மிளகாய் செடியிலேயே பழுத்து காய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசு உடனடியாக நிவாரணம் வழங்கிட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also see...
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading