Home /News /national /

புதுச்சேரியில் ஒரே நாளில் 431 பேருக்கு தொற்று உறுதி - 3 பேர் உயிரிழப்பு!

புதுச்சேரியில் ஒரே நாளில் 431 பேருக்கு தொற்று உறுதி - 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

மாநிலத்தில் தற்போது 5,458 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,946 ஆக உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 279 நபர்களுக்கும், காரைக்காலில் 109 பேர், ஏனாமில் 34 பேரும், மாஹேவில் 9 பேர் என மொத்தம் 431 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் தற்போது 5,458 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,946 ஆக உயர்ந்துள்ளது.

Also read... ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது!

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,56,159 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,63,563 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,23,144 பேரும், இரண்டாம் தவணை 6,08,278 பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 8,834 பேர் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக 15,40,256 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona, Corona death, Pondicherry

அடுத்த செய்தி