புதுச்சேரியில் செயல்படாத பூங்காவிற்கு மலரஞ்சலி

புதுச்சேரியில் செயல்படாமல் பாழடைந்துள்ள  பூங்காவிற்கு பொது மக்கள் மலரஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் செயல்படாத பூங்காவிற்கு மலரஞ்சலி
பூங்காவிற்கு மலரஞ்சலி
  • News18
  • Last Updated: September 29, 2020, 4:36 PM IST
  • Share this:
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் சிங்கம் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு சறுக்குமரம், ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் இருந்தன. இதனால் அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகள் விளையாடி வந்தனர்.

ஆனால் சில ஆண்டுகளாக இந்த பூங்கா போதிய பராமரிப்பின்றி பாழடைந்தது. இங்கிருந்த விளையாட்டு உபகரணங்களும் உடைந்து வீணாகி உள்ளது. இதனால் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.Also read... ஏஜெண்ட் மோசடியால் மலேசியாவில் மாட்டிக்கொண்ட தந்தை: படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப்போகும் நிலையில் சிறுவர்கள்..


இதனை கண்டித்தும், பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில்  பூங்காவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பங்கேற்றவர்கள் பூங்காவிற்கு மாலை அணிவித்து வத்தி, கற்பூரம் காட்டி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading