ஆசையாக வளர்க்கும் பூனை கர்ப்பம்: நலங்கு வைத்து வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்
புதுச்சேரியில் வீட்டில் ஆசையாக வளர்த்த பூனைக்கு வீட்டின் உரிமையாளர் வளைகாப்பு விழா நடத்திய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆசையாக வளர்த்த பூனைக்கு வீட்டின் உரிமையாளர் வளைகாப்பு விழா
- News18
- Last Updated: September 16, 2020, 7:22 PM IST
புதுச்சேரி மூலக்குளத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்த பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த வீட்டின் உரிமையாளர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து தான் ஆசையாக வளர்த்த செல்லப் பிராணியான பூனைக்கு வளைகாப்பு நடத்தினார்.
அந்த பூனைக்கு பூமாலை அணிவித்து ஒரு பெண்ணுக்கு நலங்கு சுற்றுவதுபோல் நலங்கு வைத்து வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடத்தியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Also read... நடிகர் சூர்யா கருத்தை நீதிமன்றம் பெரிதுபடுத்தக்கூடாது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்..
அந்த வீட்டில் இருந்த சிறுமிகளும் பூனைக்கு நலங்கு வைத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.7 வகையான தட்டுகளில் நலங்கு பொருட்கள், பூனைக்கு பிடித்த உணவுகளையும் வைத்திருந்தனர். மறுநாளே அந்த பூனை அழகான 4 பூனை குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்த பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த வீட்டின் உரிமையாளர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து தான் ஆசையாக வளர்த்த செல்லப் பிராணியான பூனைக்கு வளைகாப்பு நடத்தினார்.
அந்த பூனைக்கு பூமாலை அணிவித்து ஒரு பெண்ணுக்கு நலங்கு சுற்றுவதுபோல் நலங்கு வைத்து வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடத்தியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.