Home /News /national /

புதுச்சேரியில் சபாநாயகரை மறித்த சுயேட்சை எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரியில் சபாநாயகரை மறித்த சுயேட்சை எம்.எல்.ஏக்கள்

 சபாநாயகரை மறித்த சுயேட்சை எம்.எல்.ஏக்கள்

சபாநாயகரை மறித்த சுயேட்சை எம்.எல்.ஏக்கள்

பிஆர் சிவா பேசுகையில், காரைக்காலில் உள்ள மாவட்ட ஆட்சியர் முதல்வருக்கு கட்டுப்படுவது  இல்லை. முதலமைச்சரும் வேகமாக செயல்படுவது இல்லை. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :


புதுச்சேரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு பிறகு புதுச்சேரி சட்டமன்றம் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி கூடியது. இடைக்கால பட்ஜெட் அன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 2ம் தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளதால் பிப்ரவரி 23 ஆம் தேதி அவை கூட்டப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆளும் கட்சியினரும், எதிர்கட்சி சிவா தலைமையில் எதிர்கட்சியினரும் முழுமையாக அவைக்க வந்திருந்தனர்.


 திருக்குறளை வாசித்து சபாநயகர் அவையை தொடங்கி வைத்தார். இரங்கல் குறிப்பு முதலில் எடுத்து கொள்ளப்பட்டு, சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர்கட்சியினர் நீட் விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பினர். சபாநாயகர் இருக்கை வரை சென்று பேனர் பிடித்து கோஷம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.


அப்போது ஜிஎஸ்டி சட்ட முன் வரைவு கொண்டு வரப்பட்டு அனுமதி பெற்றவுடன் அவை ஒத்திவைக்கப்பட்டது. அன்று மொத்தம் 20 நிமிடம் மட்டுமே அவைநடைபெற்றது. இந்நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட்டிற்கு சட்டமன்றம் கூடியது. இந்த கூட்டம் சில நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் என கூறப்பட்டது. இதனால் அவையை அதிக நாட்கள் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தினர்.


இந்நிலையில், சபை நடவடிக்கையில் பங்கேற்க சபாநாயகர் செல்வம் சபைக்கு வந்தார். அப்போது வெளியில் உறுப்பினர் இருக்கையில் அமர்ந்திருந்த சுயேட்சை உறுப்பினர்கள் நேரு, பிஆர் சிவா, பிரகாஷ்குமார் ஆகியோர் சபாநாயகரை வழிமறித்து மக்கள் பிரச்சனைகள் அதிக அளவில் இருப்பதால் சபையை ஒரு வார காலமாவது நடத்த வேண்டும், அதிகாரிகளுக்கு சம்பளம் போட மட்டுமே சபையை கூட்டுவது தவறு என கூறினர். இதற்கு அவைக்குள் இப்பிரச்சனையை பேசுங்கள் என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


இந்த பிரச்சனையை அவைக்குள் 3 உறுப்பினர்களும் எழுப்பினர். இதன் பின்னர் அவையில் முதலில் பேசிய உறுப்பினர் நேரு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். மக்கள் பிரச்சனையை தீர்க்க சபையை குறைந்தது ஒரு வார காலமாவது நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய திமுக மற்றம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தினர். 




பிஆர் சிவா பேசுகையில், காரைக்காலில் உள்ள மாவட்ட ஆட்சியர் முதல்வருக்கு கட்டுப்படுவது  இல்லை. முதலமைச்சரும் வேகமாக செயல்படுவது இல்லை. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது. காரைக்காலில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுகிறது என்றார். திமுக உறுப்பினர் சம்பத் குறுக்கிட்டு சபைக்கு வருவதற்கு முன்பே வெளியில் இருப்பவர்கள் சில நிமிடங்கள்தானே சபை நடைபெறப்போகிறது. இதற்கு ஏன் வேகமாக செல்கிறீர்கள் என கிண்டல் செய்வதாக கூறினார்.


இதனால் சபையை 1 வார காலமாவது நடத்துங்கள் என்றார். ஆனால் காலை 9.30 மணிக்கு துவங்கிய சட்டமன்ற கூட்டம் காலை 11.35 மணிக்கு முடிந்தது. சட்டபேரவை நிகழ்வை காலவரையறையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்தி வைத்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி