• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காங்கிரசை மீறி கூட்டணி கூட்டத்தை கூட்டிய திமுக..

காங்கிரசை மீறி கூட்டணி கூட்டத்தை கூட்டிய திமுக..

திமுக கூட்டம்

திமுக கூட்டம்

வழக்கமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பதிலாக திமுக அலுவலகத்தில் கூட்டத்தை கூட்டியதன் மூலம் இக்கூட்டணிக்கு தலைமை வகிப்பதை திமுக உறுதி செய்துள்ளது.

  • Share this:
புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டி வருவது வழக்கம். இம்முறை உள்ளாட்சித்தேர்தலுக்கு காங்கிரஸ் இக்கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டவில்லை. அதையடுத்து புதுச்சேரி மாநில மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமைக்கழக அலுவலகத்தில் மாநில அமைப்பாளர்  சிவா  எம்எல்ஏ தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.

கலந்துகொண்டவர்கள் யார்?

இதில் திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலர் ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வநாதன், ஆதவன், எழில்மாறன், மதிமுக மாநில பொறுப்பாளர் கபிரியேல், செல்வராசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முகமது உமர் பாரூக், முகமது இப்ராஹிம், மனித நேய மக்கள் கட்சி பிரகாஷ், முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், "பாஜக புதுச்சேரியில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகிறது. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்கு முன்பு நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமித்தது. ஆறே எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு 10 எம்.எல்.ஏ.க்கள் கொண்டுள்ள என்.ஆர்.காங்கிரசை மிரட்டி பணிய வைத்து ஆட்சி அதிகாரத்தில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை பறித்துக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பறித்துக் கொண்டது என கடுமையாக விமர்சித்தார்.
Also Read: ₹10 கோடி சேமிப்புடன் 35 வயதில் ஓய்வு பெற்ற பெண் – எப்படி சாத்தியமானது? – ரகசியம் அறிந்துகொள்ளுங்கள்..

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்குள் ஏற்பட்ட பிணக்குகளை புறந்தள்ளி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெற்றி பெற நமது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி ஏற்க வேண்டும்" என்று சிவா  குறிப்பிட்டார்.

வழக்கமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பதிலாக திமுக அலுவலகத்தில் கூட்டத்தை கூட்டியதன் மூலம் இக்கூட்டணிக்கு தலைமை வகிப்பதை திமுக உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக கட்சி வட்டாரங்களில் பேசுகையில், "மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் முதல்முறையாக உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக கூட்டத்தை கூட்டினர். கட்சிகள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைப்பை மையப்படுத்தி பேசினோம். அடுத்தக்கட்டமாக நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. அதையடுத்து தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் இறுதி செய்யப்படும்" என்று குறிப்பிட்டனர்.

Also Read:  பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பைக் சாகசம்.. இளைஞர்கள் அட்டகாசம்..

புதுச்சேரி திமுக ஒருங்கிணைந்த அமைப்பாளர் சிவா தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சிவக்குமார், முன்னாள் எம்பி திருநாவுக்கரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத் , செந்தில்குமார், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம், விசிக மாநில அமைப்பாளர் தேவ பொழிலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டு கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து கலந்து ஆலோசனை செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: