Home /News /national /

புதுச்சேரியில் ஒரே நாளில் 1,849 பேருக்கு கொரோனா தொற்று - 3 பேர் உயிரிழப்பு!

புதுச்சேரியில் ஒரே நாளில் 1,849 பேருக்கு கொரோனா தொற்று - 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா சிகிச்சை (மாதிரிப்படம்)

கொரோனா சிகிச்சை (மாதிரிப்படம்)

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 1,316 நபர்களுக்கும், காரைக்காலில் 447 பேர், ஏனாமில் 58 பேரும், மாஹேவில் 28 பேர் என மொத்தம் 1,849 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
புதுச்சேரியில் ஒரே நாளில் 1,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 1,316 நபர்களுக்கும், காரைக்காலில் 447 பேர், ஏனாமில் 58 பேரும், மாஹேவில் 28 பேர் என மொத்தம் 1,849 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் தற்போது 11,344 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,896 ஆக உள்ளது.

Also read... புதுச்சேரியில் ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பணிக்கு தேர்வு...!

இன்று 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1,29,319 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,42,559 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Also read... புதுச்சேரியில் பள்ளி-கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை

கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,12,066 பேரும், இரண்டாம் தவணை 5,92,743 பேரும் செலுத்தியுள்ளனர். மொத்தமாக 15,08,290 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona, Corona death, Pondicherry

அடுத்த செய்தி