துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி மாற்றமா?

"எதுவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. உறுதியான செய்தி வந்தால் உடன் பதிவு செய்கிறேன்" என்று இல.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி மாற்றமா?
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • Share this:
புதுச்சேரியில் கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்தது. அப்போது துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். புதுச்சேரியில் ஆட்சியாளர் தரப்பு, துணைநிலை ஆளுநர் தரப்பு  மோதல் தொடக்கம் முதல் இதுநாள் வரை தொடர்கிறது.  அவ்வப்போது துணைநிலை ஆளுநர் மாற்றம் என்ற தகவல் பரவி வருகிறது.

இச்சூழலில் தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பாஜக  எம்பியான இல. கணேசன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. இதுதொடர்பாக இல கணேசன் தனது முகநூல் பக்கத்தில், "எதுவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. உறுதியான செய்தி வந்தால் உடன் பதிவு செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கிரண்பேடி மத்திய அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் பரவின.அதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் வாட்ஸ்அப்பில் கேட்டதற்கு, "கடவுளுக்கு மட்டுமே நன்றாக தெரியும்" என்று பதிலளித்துள்ளார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading