இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் ஜனவரி 25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறது. புதுச்சேரி அரசின் தேர்தல் துறை சார்பில் தேசிய வாக்காளர் தினம் கம்பன் கலையரங்கில் நடந்தது.
விழாவுக்கு தலைமை செயலாளர் அஸ்வனிகுமார்,மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் முன்னிலை வகித்தார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் வரவேற்றார். விழாவில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் முதல்முறை வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டையை வழங்கினார். மேலும் பல்வேறு விருதுகளையும் வழங்கினார்.
சிறந்த வாக்காளர் பதிவு அதிகாரிக்கான விருது சத்தியமூர்த்தி, ஆதர்ஷ் ஆகியோருக்கும், சிறந்த துணை வாக்காளர் பதிவு அதிகாரி விருது பொய்யாதமூர்த்தி, ராஜலட்சுமி ஆகியோருக்கும், சிறந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர் விருது லட்சுமி, பிரபாகரன், சுமதி, லலிதா, விவேகானந்தன், கோபிநாதன், சக்திவேல், தேவகி ஆகியோருக்கும், தேர்தலில் தபால் வாக்குகளை நிர்வகித்தல் மற்றும் தேர்தல் நேர கொரோனா தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்ட துணை தேர்தல் அதிகாரி சவுரிரத்னகோஷ் கிஷோர், அரசு பொறியியல் கல்லூரி துணை பேராசிரியர் கோவிந்தசாமி, வேளாண்துறை துணை இயக்குனர் செழியன் ஆகியோருக்கும், சிறப்பாக செயலாற்றிய நலவழித்துறை, உள்ளாட்சி, தேசிய தகவல் நிறுவனம், கள விளம்பரத்துறையினருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது.
சிறந்த தேர்தல் கல்வி ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கான விருது பாரதிதாசன் அரசு கல்லூரி துணை பேராசிரியர் அருள்மேரி, இந்திராகாந்தி கலை அறிவியல் கல்லூரி துணை பேராசிரியர் சதீஷ்குமார், கஸ்துõரிபாய் காந்தி செவிலியர் கல்லுõரி துணை பேராசிரியர் அருணாதேவி, வாணிதாசன் அரசு பள்ளி கலை ஆசிரியர் உமாபதி, அமலோற்பவம் பள்ளி ஆங்கில விரிவுரையாளர் இன்பராஜ், பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுகுணா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் பரிசுகளை வழங்கினார். முடிவில் துணை தலைமை தேர்தல் அதிகாரி சவுரிரத்னகோஷ்கிஷோர் நன்றி கூறினார்.
Must Read : தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
முதல்முறையாக வாக்காளர் அடையாள அட்டையை பெற்ற முதல் வாக்காளர்கள் கூறும்போது, இதுவரை மாணவர்களாக இருந்த நாங்கள் இன்று முதல் இந்திய குடிமகனான அதாவது வாக்காளர்களாக உயர்ந்துள்ளோம். எங்கள் ஓட்டும் உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருக்கும். விலைமதிப்பிலா தங்களது வாக்கு எப்போதும் விற்கப்படாது என தெரிவித்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Puducherry)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.