புதுச்சேரியில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மதிப்பு எவ்வளவு?

புதுச்சேரியில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மதிப்பு எவ்வளவு?

பணம் - மாதிரிப்படம்

புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான தேதி முதல் நேற்று வரை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான தேதி முதல் நேற்று வரை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

  அதன்படி, புதுச்சேரியில் இதுவரை, புதுச்சேரி காவல்துறை சார்பில் நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

  100 சதவீத வாக்காளர்கள் வாக்களித்து, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Must Read : தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான தேதி முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி (நேற்று) வரை தேர்தல் ஆணையம் மற்றும் கலால் துறை காவல்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, பரிசு பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு 42.12 கோடி ரூபாய் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: