• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் பாஜக-பாமக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்?

புதுச்சேரியில் பாஜக-பாமக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்?

ராமதாஸ்

ராமதாஸ்

ரங்கசாமிக்காக நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை..

  • Share this:
    30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக-பாமக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமக தரப்பில் 10 தொகுதிகளை கோர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 5 தொகுதிகளை நிச்சயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து புதுச்சேரி மாநில பாமக அமைப்பு செயலாளர் தன்ராஜ் கூறுகையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பத்து தொகுதிகளை கேட்க விரும்பினோம் ஆனால், பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நலன் கருதி, தற்போது 5 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அதில், புதுச்சேரியில் 4 தொகுதிகளும், காரைக்காலில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறினார்.

    அத்துடன், ரங்கசாமி எங்கள் கூட்டணிக்கு வந்தால், அமோக வெற்றி பெறுவோம். இல்லை யென்றால் அது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குதான் பலம் சேர்க்கும் என்று கூறிய தன்ராஜ், ரங்கசாமிக்காக நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் என்றும் கூறினார்.



    Must Read : அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு - தகவல்

     

    தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: