ஹோம் /நியூஸ் /national /

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்தது..

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்தது..

புதுச்சேரி

புதுச்சேரி

இந்த புதிய மின் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. 2021-22ம் ஆண்டுக்கான மின் கட்டணத்தை இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கடந்த ஏப்ரல் 4ம் தேதி நிர்ணயித்தது. இதற்கான ஆணையை மின்துறை இன்று வெளியிட்டுள்ளது.

இந்த ஆணையின்படி புதுச்சேரியில் 2021-22ம் ஆண்டுக்கான மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு ரூ.1.50லிருந்து ரூ.1.55 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு ரூ.2.55லிருந்து ரூ.2.60 ஆகவும், 201லிருந்து 300 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு ரூ.4.50லிருந்து ரூ.4.65 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாட்டுக்கு ரூ.5.90லிருந்து ரூ.6.05 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி

இதுதவிர வர்த்தக பயன்பாட்டுக்கு 100 யூனிட் வரை ரூ.5.60லிருந்து ரூ.5.70, 101 முதல் 200 யூனிட் வரை ரூ.6.60லிருந்து ரூ.6.75, 250 யூனிட்டுக்கு மேல் ரூ.7.40லிருந்து ரூ.7.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை உடைப்புக்கு காரணம் இதுதான்..

இந்த புதிய மின் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த மாதத்திற்கான மின் கட்டண பில் ஆணையின் உத்தரவுப்படி, உயர்ந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைக்கட்டணம் மற்றும் மின் உபயோக கட்டணம் மீதான 5 சதவீத கூடுதல் வரியை வரும் 2021-22ம் ஆண்டுக்கு வசூலிக்க ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை புதுச்சேரி அரசின் மின்துறை இன்று வெளியிட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Electricity bill, Puducherry