கொரோனா தடுப்பூசி போட வீடு வீடாக செல்லும் மருத்துவக் குழு... அலட்சியப்படுத்தும் மக்கள்

தடுப்பூசி போட வீடு வீடாக செல்லும் மருத்துவக் குழு

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு மக்கள் போராடி வரும் சூழ்நிலையில் புதுச்சேரியில் வீடு வீடாக சென்று மருத்துவக் குழு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

  • Share this:
கொரோனா நோயே  புதுச்சேரியில் இல்லை என்ற நிலையை உருவாக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு தடுப்பூசி போடும் முகாமை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி திருவிழாக்கள்,தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவங்களில் சிறப்பு முகாம்,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள்,அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கென பிரத்யேகமாக தடுப்பூசி செலுத்தும் மையம் என ஏற்பாடுகளை அரசு செய்தது.

இதன் பயனாக இன்று வரை இரண்டாவது தவணை எடுத்து கொண்டவர்களுடன் சேர்த்து 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். 50 சதவீதம் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், வீடுகளில் முடங்கியுள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு அவரவர் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Also read : தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பாராட்டிய மத்திய பிரதேச அமைச்சர்

கடந்த ஒருவாரமாக இப்பணியை செய்வதாகவும் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி தடுப்பூசி போட வலியுறுத்தி வருகிறோம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏன் தடுப்பூசி எடுத்து கொள்ள மறுக்கிறீர்கள் என முதியவர் ஒருவரிடம் கேட்டதற்கு,தனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. தடுப்பூசி போட்டால் நிச்சயம் இறந்து விடுவேன் என கூறினார்.உடனே அவரிடம் மருத்துவ குழுவினர் விளக்கி சமாதானப்படுத்தி தடுப்பூசியை செலுத்தினார்கள்.

சமூக வலைதளத்தில் வரும் தவறான தகவலால் தடுப்பூசி பற்றி மக்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. 100 சதவித தடுப்பூசி திட்டத்தின் கீழ் மக்களை நேரடியாக சந்திக்கிறோம். மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மருத்துவ குழு தெளிவுபடுத்தி தடுப்பூசி போடுகிறோம் என மருத்துவ குழுவில் இடம்பெற்றுள்ள செவிலியர் ஜீனத் பேகம் தெரிவிக்கிறார்.பிற மாநிலத்தில் தடுப்பூசி செலுத்த மணி கணக்காக காத்திருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் புதுச்சேரியில் அதுபோன்று இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் தடுப்பூசி சுலபமாக கிடைக்கிறது.

Also Read : சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று தடுப்பூசி செலுத்தப்படும் - மாநகராட்சி அறிவிப்பு

தடுப்பூசி செலுத்தப் பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.  அருகாமையில் உள்ள முகாம் மற்றும் மையங்களில் சுலபமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். ஆகவே இதை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அரசு சார்பாக வலியுத்துகிறோம் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் மருத்துவர் அருண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள்‌ புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது.அண்டை மாநிலமான தமிழகத்தில் தடுப்பூசிக்கு மக்கள் பல மணிநேரம் காத்திருக்கிறார்கள், தடுப்பூசிக்கு போராட்டம் நடத்துகிறார்கள்.ஆனால் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புதுச்சேரியில் 50% பேர் தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுவது வேதனையின் உச்சமாக உள்ளது என்று மருத்துவ பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: