• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்த உயர்நீதிமன்றம் - புதுச்சேரியில் பெட்ரோல் & டீசல் விலை குறைகிறது

மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்த உயர்நீதிமன்றம் - புதுச்சேரியில் பெட்ரோல் & டீசல் விலை குறைகிறது

கோப்புப் படம்

கோப்புப் படம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெட்ரோலுக்கான வரி 21.15 சதவீதமாகவும், டீசலுக்கான வரி 17.15 சதவீதமாகவும் இருந்தது. இந்த பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை 28 சதவீதமாகவும், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை 21.80 சதவீதமாகவும் உயர்த்தி கடந்த மே மாதம் 27-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

    இந்த அரசணைக்கு தடை விதிக்க கோரி காரைக்காலை சேர்ந்த தேவமணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், முழு ஊரடங்கின் காரணமாக பொது போக்குவரத்து தடைப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தினால் பொது மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

    மேலும் படிக்க...தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை - இன்றைய நிலவரம் என்ன?

    மேலும் மதிப்பு கூட்டு வரி சட்டபிரிவு 31-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மட்டும்தான் அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த சட்டத்தை பயன்படுத்தி விலை ஏற்றப்பட்டது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மதிப்பு கூட்டு வரி சட்டபிரிவு 31-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வரியை குறைக்க மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளதால், வரியை உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இதையடுத்து, புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: