புதுச்சேரியில் தினமும் 4000 பேருக்கு ’மூலிகை சூப்’... மகளிர் சுய உதவிக்குழுவினர் விநியோகம்!

புதுச்சேரியில் தினமும் 4000 பேருக்கு ’மூலிகை சூப்’... மகளிர் சுய உதவிக்குழுவினர் விநியோகம்!
சூப் தயாரிக்கும் பெண்கள்
  • Share this:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் புதுச்சேரியில் மூலிகை சூப்பினை மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்து வீடு வீடாக விநியோகம் செய்கின்றனர்.

கொரானா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிகரிக்க செய்யவும் புதுச்சேரியில் கமலா அறக்கட்டளை மற்றும் காஞ்சிபுரம் மகாயோகம் சார்பில் கபவாத சூப் தயாரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதனை கமலா அறக்கட்டளையின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடு வீடாக சென்று வழங்குகின்றனர். கமலா அறக்கட்டளையின் நிறுவனர் வைத்தியநாதன், தலைவி ரமா வைத்தியநாதன் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் தினந்தோறும் 4000 பேர் வீதம், இந்த சூப் வீடுவீடாக தொடர்ந்து ஒரு வாரத்துக்கு வழங்கப்பட உள்ளது.


இதுகுறித்து கமலா அறக்கட்டளை தலைவர் ரமா வைத்தியநாதன் கூறும்போது, பொதுமக்களுக்கு எதிர்ப்பு சக்தியைக் ஊட்டக்கூடிய வகையில் இந்த கபவாத சூப் தயாரித்து எங்கள் பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி வருவதாகவும் இதை மக்கள் அனைவரும் வரவேற்று அருந்துவதால் அவர்களுடைய நோய்த்தொற்று எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து மகா யோகம் பயிற்சியாளர் பாஸ்கர் தெரிவிக்கும்போது  எதிர்ப்பு சக்தி கொடுக்கக்கூடிய மிளகு, திப்பிலி, பட்டை, மஞ்சள் உள்ளிட்ட வீட்டில் கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு இந்த சூப் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 6000 பேருக்கான சூப்பை தயாரிக்க 3 மணி நேரமாகும். இந்த சூப் நுரையீறில் தொற்ற கூடிய கிருமிகளை கொல்லும் என்றார்.

Also see...
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading