• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி எல்லையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. 2 மணி நேரமாக காத்திருக்கும் பொது மக்கள்..

புதுச்சேரி எல்லையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. 2 மணி நேரமாக காத்திருக்கும் பொது மக்கள்..

வாகன சோதனையால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்,வேன், லாரி, சரக்கு ஏற்றி வந்த கனரக வாகனங்கள் என அனைத்தும் அணிவகுத்து நின்றன. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் ஊரடங்கு இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக-புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட ஆரோவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நண்பகல் 12 மணி முதல் புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு அனைத்து வகையான வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.

மருத்துவ உபகரணங்கள் எடுத்து செல்லும் வாகனங்களை உரிய ஆவணம் காட்டிய பிறகு அனுமதித்தனர்.  மருத்துவ காரணங்களை தவிர பிற காரணங்களை கூறுபவர்களை திரும்ப அனுப்பினார்கள். அதே வேளையில் மருத்துவம் மற்றும் தினசரி வேலை முடித்து திரும்பி மக்கள் ஊர் செல்ல முடியாமல் எல்லையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் கொடூரில் இருந்து ஜிப்மருக்கு பரிசோதனைக்கு வந்து ஊர் திரும்பிய கர்ப்பிணி
அமிர்தவள்ளி, ”ஒன்றரை மணி நேரமாக காத்திருக்கிறோம். வழிவிடவில்லை என்கிறார்.

புதுச்சேரி


கடலூர் லாரி ஓட்டுநர் ஏழுமலை கூறுகையில், “
கடலூரில் இருந்து சென்னைக்கு ரசாயனம் கொண்டு வந்தேன். 12 மணியை தாண்டியதால் அனுமதி இல்லை என நிறுத்தியுள்ளனர். உரிய ஆவணம் காட்டியும் அனுமதிக்கவில்லை. இரண்டு மணிநேரமாக காத்திருப்பதாக கூறுகிறார். புதுச்சேரியை யொட்டியுள்ள தமிழகத்தின் புளிச்சப்பள்ளம் பகுதியில் இருந்து தினசரி புதுச்சேரிக்கு நுங்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் பரசுராமன், "வழக்கம் போல் விற்பனை முடிந்து வீடு திரும்ப முடியாமல் இரண்டு மணிநேரமாக காத்திருப்பதாக புகார் கூறுகிறார். புதுச்சேரியின் சேதராப்பட்டு தொழிற்சாலையில் பாதிப்பை சரி செய்ய அனுமதிக்கவில்லை. தேவையான ஆவணங்களை காண்பித்தும் அனுமதிக்கவில்லை என்கிறார் மெக்கானிக் யுவராஜ்.

புதுச்சேரியை யொட்டியுள்ள தமிழகத்தின் ஒழிந்தியாப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி செந்தில் புதுச்சேரியில் பூக்கடை வைத்துள்ளார். அதிகாலை 5 மணிக்கு சென்று பூ விற்று வீடு திரும்பியுள்ளார். 2 மணி நேரமாக எல்லையில் காத்திருக்கிறார். போலீசார் அனுமதிக்கவில்லை என புகார் கூறுகிறார்.

மேலும் படிக்க... திருச்சியில் உடைந்த எம்.ஜி.ஆர் சிலை குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இவர்கள் மட்டுமல்லாது இந்த வாகன சோதனையால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்,வேன், லாரி, சரக்கு ஏற்றி வந்த கனரக வாகனங்கள் என அனைத்தும் அணிவகுத்து நின்றன.
சரக்கு வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கோரிமேடு எல்லை பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: