புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா நோய் தொற்று பெரும் அளவில் குறைந்து வருகிறது. ஆறரை லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 2 லட்சத்து 58 ஆயிரம் பேர் இரண்டாவது தடுப்பூசி 2 போட்டு உள்ளனர். இதனால் புதுச்சேரியில் நோய்தொற்று குறைவாக இருக்கிறது.
நோய் தொற்று குறைவாக இருப்பதை தொடர்ந்து 100 சதவீத தடுப்பூசி போட்ட பகுதியாக புதுச்சேரி மாற்ற சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் நோய் தொற்று வெகுவாக குறைந்து விட்டது.கடந்த 24 மணிநேரத்தின் படி ஒருவர் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read : ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - கல்வித் தகுதி, சம்பளம் உட்பட முழு விவரம்
இதனால் புதுச்சேரியை போல் ஆந்திர மாநிலமும் 100% தடுப்பூசி போடும் பணியை நோக்கி முன்னேறியுள்ளது. வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து தடுப்பூசி போட ஆந்திரா சுகாதார பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏனாம்-ஆந்திர எல்லை கிராமங்களில் சுகாதாரப் பணியாளர்கள் வீதி வீதி சென்று தடுப்பூசிகளுடன் வருகிறோம். முதல் டோஸ் தடுப்பூசி, இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதாவர்கள் போட்டு கொள்ள வருமாறு தெலுங்கு மொழியில் கூவி கூவி அழைப்பு விடுக்கிறார்கள்.இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.