• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கிரண்பேடி ஒரு ஜீரோ... அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு!

கிரண்பேடி ஒரு ஜீரோ... அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு!

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

நாடு முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விட்டது. ஆனால் புதுச்சேரியில் மதுபான கடைகளை திறக்கும் கோப்பை கிரண்பேடி திரும்ப அனுப்பவில்லை.

  • Share this:
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சரமாரி புகார் கூறியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு. புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பிரதமருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.



இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,துணைநிலை ஆளுநராக பதவி ஏற்று கிரண்பேடி4 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

புதுச்சேரிக்கென எதையும் செய்யவில்லை. என்ன செய்தார் என பட்டியலிட முடியுமா..? மக்களை முழுமையாக சாகடித்து விட்டார். மக்களுக்கு முடிந்தவரை தொல்லை கொடுத்துள்ளார்.

அவர் பதவி தொடருமா...? என  மத்திய அரசு தான் தெரிவிக்க வேண்டும் என்றார். இவ்வளவு மோசமான ஆளுநரை இந்தியாவில் யாரும்  பார்த்ததில்லை. ஆளுநராக வந்த நாள் முதல் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார்.

ராஜ் நிவாஸ் முழுவதும் தனது சொத்ததாக கருதுகிறார் என குற்றம்சாட்டியஅமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அமைச்சரவை முடிவுகளை தடுக்கிறார். அனைத்து கோப்புகளையும் மத்திய அரசுக்கு அனுப்பி காலம்கடத்துகிறார். ஆளுநராக அவரது செயல்பாடு முற்றிலும் பூஜ்ஜியம் என்றும் அமைச்சர் புகார் கூறினார்.

கொரோனாவிற்கு சிக்கனம் செய்ததாக கிரண்பேடி பொய் தகவலை கூறுகிறார். அவருக்கு புகைப்படம்-வீடியோ எடுக்கும் ஆட்களை குறைத்தாரா...?அல்லது மாளிகை செலவை குறைத்துள்ளாரா என கேள்விகளை எழுப்பிய அமைச்சர், முதல்வர் நாராயணசாமி பல பதவிகளை வகித்து விட்டார். அவருக்கு அரசு விதிகள் தெரியும். ஆனால் எதுவும் தெரியாமல் ஈகோவில் இருக்கிறார் கிரண்பேடி என்றும் நாடு முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விட்டது. ஆனால் புதுச்சேரியில் மதுபான கடைகளை திறக்கும் கோப்பை கிரண்பேடி திரும்ப அனுப்பவில்லை.

ஒரு நாள் மதுபான கடை திறக்கவில்லை என்றால் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். இதனால் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்றும் மதுவின் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறும். ஆனால் கிரண்பேடி புதுச்சேரியில் மட்டும் ஒரே வரி என கூறுவது அரசுக்கு வரும் வருவாயை கெடுக்கும் செயல் என்றும் தெரிவித்தார்.

ஆபத்தான கொரோனாவை கூட சமாளித்து விட்டோம். கிரண்பேடியை சமாளிக்க முடியலை என்ற அமைச்சர், எல்லைகளை தடுத்து நோயை தடுத்து விட்டோம். ஆனால் கிரண்பேடியின் தவறான நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை. கிரண்பேடியின் நடவடிக்கை அனைத்தும் operation success Patient died என்பதுபோலதான். ஆளுநராக அவர் மேலும் ஒரு ஆண்டு நீடித்தால் புதுச்சேரியே இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: