கிரண்பேடி மீது வழக்கு தொடரப்படும் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மீது வழக்கு தொடரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி மீது வழக்கு தொடரப்படும் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
கிரண்பேடி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.
  • Share this:
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், புதுச்சேரியில் 23 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர். ஆனால் துணைநிலை ஆளுநருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு செயலர் நியமிக்கவில்லை. புதுச்சேரியில் உள்ள 23 ஐ .ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர் கூட தகுதி இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

கிரண்பேடி ஆய்வுக்காக செல்லும்போது புதுச்சேரி அரசு பேருந்தின் ரூட்டை கேன்சல் செய்து பயன்படுத்தினார். ஆனால் பேருந்தை பயன்படுத்தியதற்கான தொகையை இதுவரை ஆளுநர் மாளிகை செலுத்தவில்லை.

ஏனாம் பிராந்தியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தால் ஜூலை 1-ம் தேதி முதல் சுத்தப்படுத்தும் பணி நடக்கவில்லை என குற்றம் சாட்டினார்.


2 ஆண்டுகளுக்கு மேல் ஆளுநர் பதவி வகிக்க மாட்டேன் என கிரண்பேடி தெரிவித்து இருந்தார். ஆனால் இதுவரை பதவியை தொடர்ந்து வருகிறார் என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் குற்றம் சாட்டினார்.

 மேலும் கிரண்பேடி செயல்பாடுகள் குறித்து பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் கடிதம் அளிக்க உள்ளேன் என்று தெரிவித்த அவர், மத்திய அரசின் திட்டங்கள், ஏனாம் பிராந்தியத்தில் திட்டமிட்டு மக்கள் நலத் திட்டங்களை தடை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றும் தெரிவித்தார்.

Also read... அமெரிக்காவைத் தாக்கும் அமீபா - மூக்கின் வழியாக உடலில் நுழைந்து மூளையை பாதிக்குமாம்...

கிரண்பேடி இருக்கும் வரை புதுச்சேரியில் அடுத்த 100 ஆண்டுகள் ஆனாலும் பாஜக ஆட்சி அமையாது என்றார். பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு கிரண்பேடி அழுத்தம் அளிக்கிறார் என்று கூறினார் அமைச்சர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு இருக்க கூடது, மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்த கூடாது என்ற நோக்கத்தில் கிரண்பேடி செயல்படுகிறார். அனைத்திற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வரும் என மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading