Home /News /national /

புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு

புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு

தலைமை செயலாளர் அஸ்வினி குமார்

தலைமை செயலாளர் அஸ்வினி குமார்

புதுவை மாநில அரசு நிறுவனமான பாசிக்கில்( குடிநீர் வினியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை நிறுவனம்) சம்பளம் பாக்கி தொடர்பாக 48 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  • News18
  • Last Updated :
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

புதுவை மாநில அரசு நிறுவனமான பாசிக்கில்( குடிநீர் வினியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை நிறுவனம்) சம்பளம் பாக்கி தொடர்பாக 48 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மூன்று மாதங்களுக்குள் பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கடந்த ஆண்டு ஜூலை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Also read... மத்திய அரசின் ஒப்புதல் பெறும்படி நிர்பந்திக்காமல் டிராக்டர் டிரைலர்களை பதிவுசெய்ய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் வழங்காததால், ஊழியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதுவை தலைமை செயலாளர் அஸ்வினி குமார், வேளாண் துறை செயலாளர் ரவி பிரகாஷ், இயக்குனர் பாலகாந்தி ஆகியோர் நேற்று ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து தலைமை செயலாளர் அஸ்வினி குமார் மற்றும் வேளாண் துறை செயலாளர் ரவி பிரகாஷ் ஆகியோர் ஆஜராகவில்லை. தவிர மற்றவர்கள் ஆஜர் ஆனார்கள்.

இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் அஸ்வினி குமார், துறை செயலாளர் ரவி பிரகாஷ் ஆகியோர் நேரில் ஆஜராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடி வாரண்ட் பிறப்பித்து, நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி