வாங்க ஆளில்லாமல் பழுத்து வீணாகும் கொய்யாப் பழங்கள் - புதுச்சேரி விவசாயிகள் வேதனை

கொரோனா ஊரடங்கு காரணமாக கொய்யாப் பழங்களை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் அவை பழுத்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வாங்க ஆளில்லாமல் பழுத்து வீணாகும் கொய்யாப் பழங்கள் - புதுச்சேரி விவசாயிகள் வேதனை
வாங்க ஆளில்லாமல் பழுத்து வீணாகும் கொய்யாப் பழங்கள்.
  • Share this:
கொரோனா தொற்றால் நாடு முழுதுவம் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆடித்திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த விழாவை நம்பிக் காத்திருக்கும் கொய்யாப் பயிரிடும் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரியின் மண்ணாடிப்பட்டு, திருக்கனூர், கூனிச்சம்பட்டு, காட்டேரிக்குப்பம், பிள்ளையார்குப்பம், செல்லிப்பட்டு, சோம்பட்டு உட்பட 10 கிராமங்களில் நடைபெறவிருந்த ஆடித்திருவிழாவில் விற்பனை செய்ய விவசாயிகள் 50 ஏக்கருக்கு கொய்யா பயிரிட்டிருந்தனர். வழக்கமாக இந்த விழாக் காலத்தில் லாரியில் வந்து வியாபாரிகள் கொய்யாவை வாங்கிச் செல்வதுண்டு. ஆனால், கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு அவ்வாறு வியாபாரிகள் வரவில்லை.

Also read: ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா உறுதி - இதுவரை 17 எம்.எல்.ஏ.க்கள் பாதிப்பு


தற்போது பழங்களைப் பறித்தால் கூலி கொடுப்பது கூட சிரமம் என்பதால் மரத்திலேயே பழங்களெல்லாம் பழுத்து கீழே விழும் நிலையில் உள்ளது. ”மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் பழங்களைச் சாப்பிட்டாலும் பெரிய அளவில் அவை கீழே விழுந்து சிதறிக் கிடக்கின்றன. மரங்களில் உள்ள பழங்களை பறவைகள் சாப்பிட்டும் வீணாகத்தான் போகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை” என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading