• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஜிஎஸ்டி முறை தோல்வி: பழைய வரி விதிப்பு முறையைக் கொண்டுவர வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி முறை தோல்வி: பழைய வரி விதிப்பு முறையைக் கொண்டுவர வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

பெரியார் சிலைக்கு திருமாவளவன் எம்.பி மாலை அணிவித்தார்.

பெரியார் சிலைக்கு திருமாவளவன் எம்.பி மாலை அணிவித்தார்.

ஜிஎஸ்டி-க்கு பதிலாக பழைய வரி விதிப்பு முறையைக் கொண்டுவர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், நாடு முழுவதும் தற்போது சமூகநீதி குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தை அடியோடு அழிப்பவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது. இந்த நிலையில், பெரியாரின் தேவை அகில இந்திய அளவில் தேவைப்படுகிறது என்றார். கொரோனா நெருக்கடியிலிருந்து மத்திய அரசு மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டது என்றும் பொருளாதாரத்தில் தவறான அணுகுமுறையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய திருமாவளவன், ஜிஎஸ்டி வரிவிதிப்பு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் பழைய வரி விதிப்பு முறையைக் கொண்டுவர வேண்டும். ஜிஎஸ்டி-யின் மாநிலப் பங்கை மத்திய அரசு முறைப்படி வழங்க மறுக்கிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய பங்கை மத்திய அரசு சட்டப்படி வழங்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

Also read: மேம்பாலம் திறப்பு விழா: கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை - முதலமைச்சர் மீது டிடிவி தினகரன் விமர்சனம்



நீட் தேர்வு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.. தேர்வுக்கு முன் சிலர் இறந்துள்ளனர். தேர்வு  முடிவுக்குப் பிறகு எத்தனை உயிரை பறிக்கும் என்று அச்சமாக உள்ளது என கூறிய திருமாவளவன், தமிழகம்-புதுச்சேரி மட்டுமல்லாது அகில இந்திய அளவில் நீட் தேர்வை கைவிட வேண்டும் என்றார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்த திருமாவளவன், தமிழகத்தைப் போல  புதுச்சேரி அரசும் இதை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: