தெலுங்கானாவிலிருந்து விமானம் மூலம் புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று மாலை வந்தார். தெலுங்கானாவிலிருந்து தான் கொண்டு வந்த ரெம்டெசிவர் மருந்தை சுகாதாரத்துறைச்செயலர் டாக்டர் அருணிடம் தமிழிசை அளித்தார். அதைத்தொடர்ந்து ஆளுநர் தமிழிசை பேட்டி அளித்தார்.
அப்போது,
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு உயர்நிலைக்கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடந்தபோது, "ரெம்டெசிவர்" மருந்து முற்றிலுமாக புதுச்சேரியில் தீர்ந்து போனது தெரிந்தது. பல இடங்களிலும் தேடியும் தட்டுப்பாடு இருந்தது. ஏற்கெனவே இது போன்ற சூழல் தமிழகத்தில் வந்த போது ஹைதராபாத்தில் தயாராவதால் அப்போது உதவினோம்.
யுகாதியால் தெலுங்கானா முதல்வர், மக்கள் என்னை அழைத்தனர். அங்கு சென்று அவர்களுடன் யுகாதியை கொண்டாடினேன். ஹைதாராபாத் நிறுவனத்திடம் தனிப்பட்ட முறையில் உதவி கோரினேன். அத்துடன் மத்திய சுகாதாரத்துறை மற்றும் தெலுங்கானா சுகாதாரத்துறையிடம் பேசினேன். தெலுங்கானா முதல்வரும் உதவினார் என்றார்.
தற்போது 1000 ரெம்டெசிவர் மருந்து கிடைத்து கையோடு விமானத்தில் எடுத்து வந்தேன். இம்மருந்து தேவைப்பட்டால் உதவ வேண்டும் என்றும் கோரிக்கையும் வைத்துள்ளோம். ரெம்டெசிவர் மருந்தை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் எச்சரிக்கை விடுத்தார்.
புதுச்சேரியில் தொற்று அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை இதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். கொரோனா தடுப்பூசி திருவிழாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முன்பு 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இன்னும் நான்கு நாட்களுக்கு இத்திருவிழாவை நீடித்துள்ளோம். தமிழ் புத்தாண்டு தினத்திலும் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி பணியில் ஈடுபட உள்ளனர். நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் லாக்டவுன் தேவையில்லை" என்று குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.