நடிகர்கள் அஜித், விஜய்க்கு தட்டும் கைதட்டலை விட காந்தி மற்றும் வஉசிக்கு தட்டும் கைதட்டல் அதிகமாக இருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் காந்தி மையம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது நடிகர் அஜித்துக்கு கை தட்டுவதை காட்டிலும் அகிம்சையை போதித்த காந்திக்கு கைதட்டுவது அதிகமாக இருக்க வேண்டும். அதேபோல் விஜய்க்கு கை தட்டுதலை விட விடுதலையை பெற்றுத்தந்த வ.உ.சிக்கு அதிகம் கைதட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ராஜேஷ் கண்ணா நகைச்சுவையை அதிக அளவில் கொடுத்தவர். நகைச்சுவை நல்ல சிகிச்சை என்று தெரிவித்த அவர், பெண்கள் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டுமென துடிக்கின்றனர். அதேநேரத்தில் காலத்தோடு இல் வாழ்க்கையிலும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் நான் ஆளுநராக இருப்பதை விட குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பதையே பெருமையாக கருதுவதாகவும் கணவருக்கு நல்ல மனைவியாக இருப்பதையே பெருமையாக கருதுவதாக தெரிவித்த தமிழிசை, பெண்களுக்கு அதிகாரம் மிகுந்த வாழ்க்கையைவிட அன்பு மிகுந்த வாழ்க்கை தான் மகிழ்ச்சியைத் தரும் என தெரிவித்தார்.
Also read... ஆளுநர் கூட்டியுள்ள மாநாட்டில் துணை வேந்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை..!
தொடர்ந்துபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி பேசிய துணைநிலை ஆளுநர், பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் திறமையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், விழாவில் மாணவர்களுக்கான மகாத்மா காந்தி கார்ட்டூன் திரைப்படம் குறுத்தட்டுகளை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் தனசேகரன், நடிகர் ராஜேஷ் கன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.