Home /News /national /

கடல் சீற்றம் காரணமாக இடிந்து விழுந்த துறைமுக பாலம்.. பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய அரசுக்கு ஆளுநர் தமிழிசை கோரிக்கை!

கடல் சீற்றம் காரணமாக இடிந்து விழுந்த துறைமுக பாலம்.. பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய அரசுக்கு ஆளுநர் தமிழிசை கோரிக்கை!

சாகர் மாலா திட்டத்தில் இங்கு பெரிய சரக்கு கப்பல்கள் வந்து வாணிபத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

சாகர் மாலா திட்டத்தில் இங்கு பெரிய சரக்கு கப்பல்கள் வந்து வாணிபத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

சாகர் மாலா திட்டத்தில் இங்கு பெரிய சரக்கு கப்பல்கள் வந்து வாணிபத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் சனிக்கிழமை நள்ளிரவு கடல் சீற்றம் காரணமாக பழுதடைந்த  பாலம் இடிந்து விழுந்தது. அப்போது ஒரு சில மீனவர்கள் மட்டுமே மீன்பிடித்ததால் அவர் பாதுகாப்புடன் உயிர்தப்பினார்கள்.

பழைய துறைமுக பாலத்தின் இடிந்த பகுதியை இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சென்று பார்வையிட்டார். அப்போது, அதிகாரிகள் உடனிருந்து விளக்கினர். இந்த ஆய்வின்போது உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி, அதிமுக செயலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தர்ராஜன் கூறும்போது, கடல் சீற்றம் காரணமாக பழைய துறைமுக பாலம் இடிந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. நள்ளிரவில் பாலம் இடிந்ததால் உயிர் சேதம் ஏற்படாமல் இருந்தது ஒரு ஆறுதலான விஷயம்.

இந்த பாலம் புதுச்சேரியின் அடையாளம். இதனை அகற்றிவிட கூடாது. பழமை மாறாமல் சரி செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்கள். இதுதான் என்னுடைய விருப்பமும் கூட.

இதையும் படிங்க - Exclusive : ''சசிகலாவின் வருகை மட்டுமே அதிமுகவை காப்பாற்றும்'' : ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா பேட்டி

இதுதொடர்பாக முதல்வரிடம் கலந்தாலோசித்து இந்த பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாகர் மாலா திட்டத்தின் கீழ் இப்பகுதியை மேம்படுத்த ரூ.60 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சாகர் மாலா திட்டத்தின் கீழ் வேலை நடைபெறும்போது பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைப்பேன்.



அந்த காலத்தில் இங்கு பல சரக்கு கப்பல்கள் வந்து சென்றுள்ளது. இது மிகப்பெரிய வாணிப தலமாக இருந்துள்ளது. அந்த பழமையை மீட்டெடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. சாகர் மாலா திட்டத்தில் இங்கு பெரிய சரக்கு கப்பல்கள் வந்து வாணிபத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல், சுற்றுலா துறையை மேம்படுத்தவும், கப்பல்கள் விடவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மேம்படுத்த வேண்டும். தற்போது கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ராஜ்நிவாசிஸ் கட்டிடமும் சிறிது பலம் இல்லாமல் உள்ளது. அதனை இடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

மத்திய அரசு வெள்ள நிவாரணமாக புதுவைக்கு ரூ.17 கோடி கொடுத்துள்ளது. பணம் மட்டுமல்லாமல் பொருளாக மத்திய அரசு நிறைய உதவி செய்துள்ளது. மீட்பு பணிக்கு துணை ராணுவத்தை அனுப்பியது. புதுவைக்கு அனைத்தும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணம் என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் கலந்தாலோசித்து இடிந்த துறைமுக பாலத்தை பழமை மாறாமல் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  தமிழிசை தெரிவித்துள்ளார். வெள்ளநிவாரணம் ரூ. 300 கோடி கேட்டு ரூ. 17 கோடி மட்டுமே மத்திய அரசு தந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு, பதில் தராமல் புறப்பட்டார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி