75 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆய்வை துவங்கிய கிரண்பேடி

புதுச்சேரியில் 75 நாட்களுக்கு பிறகு ஆளுநர் கிரண்பேடி தனது ஆய்வை மீண்டும் துவங்கியுள்ளார்.

75 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆய்வை துவங்கிய கிரண்பேடி
கிரண்பேடி
  • Share this:
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நான்காவது ஆண்டாக கிரண்பேடி நீடிக்கிறார். இவர் வார இறுதி நாட்களில் புதுச்சேரியின் நீர் நிலை மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வந்தார். கொரோனா காரணமாக மார்ச் 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியே வரவில்லை.

ALSO READ :  மதுரை மாணவி நேத்ராவிற்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு - கல்வி செலவை அரசே ஏற்கும் என உறுதி

இந்நிலையில்  75 நாட்களுக்கு பிறகு அவர் இன்று வெளியே வந்ததார். நகர அங்காடி பகுதி, உழவர் சந்தை பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என காரில் இருந்தபடியே ஆய்வுசெய்தார். மேலும் வியாபாரிகளும் பொது மக்களும் முகக் கவசம் அணிந்து இருப்பதை கிரண்பேடி பாராட்டினார்.
மேலும் வழிபாட்டு தளங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்யவும் கூட்டத்தை தவிர்க்க  மத வழிபாடு உட்பட அனைத்து இடங்களிலும் ஆன்லைன் சேவையை மக்கள் பயன்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து மறைமலை அடிகள் சாலையில் இறங்கி உப்பனாறு மேலே கட்டப்படும் பாலத்தை கிரண்பேடி பார்வையிட்டார்.

 

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading