Home /News /national /

மீண்டும் வருகிறது கோவிட் வழிமுறைகள்.. கட்டாயம் முக கவசம் அணிய புதுச்சேரி அரசு வலியுறுத்தல்

மீண்டும் வருகிறது கோவிட் வழிமுறைகள்.. கட்டாயம் முக கவசம் அணிய புதுச்சேரி அரசு வலியுறுத்தல்

கொரோனா வழிமுறைகள்

கொரோனா வழிமுறைகள்

Tamilisai Soundararajan | பிற மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது புதுச்சேரியில் கொரோனா இல்லாத நிலை தொடர்வதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த 20 நாட்களாய் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் ஒருவர் கூட இல்லை. அனைத்து பகுதியிலும் பூஜ்ஜியத்திலேயே பாதிப்பு எண்ணிக்கை இருக்கிறது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் நோய் தொற்று  அதிகரிப்பதால் புதுச்சேரியில் கோவிட் மேலாண்மைக் குழுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

தலைமைச் செயலர் அஷ்வனிகுமார், கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆனந்த மோகன், சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு, தனியார் மருத்துவ கல்லூரி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்தல், காலியாக உள்ள பணியிடங்களை அவசரகால தேவை கருதி நிரப்புதல், கூட்டு நடவடிக்கைக் குழுக்கள் அமைத்தல், கோவிட் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை மையங்கள் அமைத்தல், தடுப்பூசிப் போடுவதை தீவிரப்படுத்துதல், குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல், கோவிட் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



பிற மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது புதுச்சேரியில் உள்ள கொரோனா இல்லாத நிலை தொடர்வதற்காக பொதுமக்களாகிய அனைவரும்  முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் கட்டாயம்  முகக் கவசம் அணிய வேண்டும். தவறாமல் சரியான முறையில் அணியவும், சமூக இடைவெளி தொடர்ந்து கடைபிடிக்கவும், அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள் : தேசிய அளவில் சாதனை படைக்கத் தயாராகும் கோவில்பட்டி மகளிர் ஹாக்கி அணி
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா  நோய்தொற்று நான்காம் அலை வந்தாலும் அதன் தாக்கம் மிக மிகக் குறைவாக இருக்கும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Puducherry, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி