கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது - புதுவை அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

புதுச்சேரியில் இதுவரை கொரோனா தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது - புதுவை அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!
ஆசிரியர்கள்
  • Share this:
புதுச்சேரியில் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 63 பேருக்கு ஒரு நாளில் தொற்று உறுதியானதால் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் 60 பேருக்கும் காரைக்காலில் 3 நபர்களுக்கும் என நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 459 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 331 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.


தற்போது புதுச்சேரியில் கொரோனா குறித்த தகவல்களை மக்களிடம்  கணக்கெடுக்கும் பணி மற்றும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

 இவர்களில் இரண்டு ஆசிரியர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடுவிக்க கல்வி அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் அரசு ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Also read... புதுச்சேரியில் அடித்தே கொல்லப்பட்ட ரவுடிகள்

மேலும் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மனோகரன் அறிவுறுத்தியுள்ளனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading