புதுச்சேரியில் ஒரு தலை காதலால் மாணவிக்கு நடந்த கொடூரம்

புதுச்சேரியில் காதலிக்க மறுத்த 9ஆம் வகுப்பு மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி காயத்தை ஏற்படுத்திய கொடூர இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Share this:
புதுச்சேரி நரம்பை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி, அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப் படித்து வருகிறார். ஊரடங்கால் தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் இருந்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக சிறுமி மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டு ஓடியுள்ளார். இதில் கை , கால்களில் தீக்காயம் ஏற்பட்டு சிறுமி துடிதுடித்துள்ளார். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.


விசாரணையில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் நரம்பை பகுதியைச் சேர்ந்த, 20 வயதான மாதேஷ் என்பது தெரியவந்தது.

மாதேஷ் லேப் டெக்னிசியனுக்கு படித்துவிட்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மாதேஷ் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அதிர்ச்சியில் ஊர் மக்கள்
மாதேஷின் தொந்தரவு தாங்க முடியாமல் பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர் மாதேஷை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாதேஷ், மாணவியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக கடையில் எண்ணெய் வாங்கிய மாதேஷ், மாணவியின் வீட்டு ஜன்னல் அருகே ஒரு பாத்திரத்தில் வைத்து காய்ச்சி சூடாக்கியுள்ளார்.

பின்னர் உறங்கி கொண்டிருந்த மாணவியின் மீது ஜன்னல் வழியாக ஊற்றிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதனை அடுத்து மாதேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க...

கொரோனா விலக வேண்டி மகா மிருக்த்திஜெய யாகம்: முதல்வர் நாராயணசாமி வழிபாடு

ஒருதலை காதல் விவகாரத்தில், மாணவியை பழிவாங்க கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றிக் காயம் ஏற்படுத்திய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading