புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள 400 கிலோ எடையிலான சாக்லேட் பூதம் சிலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்து வருகிறது.
புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் மிஷன்வீதியில் சூக்கா சாக்லேட் என்ற கடையை ஸ்ரீநாத் பாலசந்தர் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டு,கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சாக்லேட் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அப்துல் கலாம், ரஜினிகாந்த், பாரதியார் போன்ற சிலைகள் உருவாக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்பு விதமாக சாக்லேட் பூதம் உருவாக்கப்பட்டுள்ளது. அலாவுதீன் கார்ட்டூன் கதாபாத்திரத்தில் விளக்கை தேய்த்தால், வரும் ஜீனி பூதம் குழந்தைகள் மத்தியில் மிக பிரபலம். இதனை நினைவு கூறும் விதமாக குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக, 'சூக்கா' சாக்லேட் ஷாப்'பில் பூதம் சாக்லேட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
182 மணி நேரத்தில் 400 கிலோ டார்க் சாக்லேட்டில், 5.5 அடி உயரம் கொண்ட வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் தங்க காசுகளும், மற்றொரு கையில் விளக்கும் ஏந்தியபடி உள்ள பூதம்
சிலையை 'ஷெப்' ராஜேந்திரன் தங்கராசு உருவாக்கி உள்ளார்.
முழுக்க முழுக்க வெளிநாட்டு 'டார்க் சாக்லேட்'டால் உருவாக்கப்பட்ட இந்த பூதம் சிலை நேற்று முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலையை ஜனவரி முதல் வாரம் வரை பார்வையிடலாம் என ஷெப் ராஜேந்திரன் தங்கராசு கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chocolate, Christmas, New Year 2023, Puducherry