புதுச்சேரியில் தொழிலதிபரை நூதன முறையில் கடத்தி பணம் பறித்த கும்பல்

புதுச்சேரியில் நூதன முறையில் தொழிலதிபரை கடத்தி 10 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில் தொழிலதிபரை நூதன முறையில் கடத்தி பணம் பறித்த கும்பல்
தொழிலதிபரை நூதன முறையில் கடத்தி பணம் பறித்த கும்பல்
  • Share this:
புதுச்சேரி புது சாரம் பகுதியை சேர்ந்தவர் குருவேல் (50). அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரில் அலுமினிய பிட்டிங் நிறுவனத்தை நடத்தி  வருகிறார். இந்நிறுவனத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் வில்லியனூரில் உள்ள பிரபல சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அலுமினிய பிட்டிங் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பி சென்ற அவரை அரும்பார்த்தபுரம்-மணவெளி சாலையில் ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி காரில் கடத்திச் சென்றுள்ளது. அவரிடம் இருந்த 10 பவுன் நகைகளை பறித்து கொண்டதுடன் அவரது செல்போன் மூலம் குடும்பத்தாருக்கு போன் செய்து வியாபாரம் ரீதியாக கமிஷன் தர வேண்டியுள்ளது 10 லட்ச ரூபாயை எடுத்து வர குருவேல் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

ALSO READ :  கொண்டாட்டங்களையும் விழுங்கிய கொரோனா - ஆடு விற்பனை முடங்கியதால் வேதனையில் வியாபாரிகள்


இதற்கு குருவேலுவின் மகன் ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக ஒப்பு கொண்டார். இதனையடுத்து அரும்பார்த்தபுரம் பாலத்தின் கீழே முக மூடி அணிந்து வந்த இருவர் பணத்தை வாங்கி சென்றனர்.

இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை குருவேலுவை காரில் வைத்து சுற்றிய கும்பல் பணத்தை கொடுத்த பிறகு  விடுவித்துள்ளது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading