அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை: கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அலைமோதிய மக்கள்..

நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு என்பதால் இன்று கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்கு சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் தொடர்ந்து அதிக அளவில் கூடி வருகின்றனர்.

அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை: கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அலைமோதிய மக்கள்..
நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு என்பதால் இன்று கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்கு சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் தொடர்ந்து அதிக அளவில் கூடி வருகின்றனர்.
  • Share this:
கடலூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1687-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் 5 நபர்களுக்கு மேல் கூட்டமாக இருக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு என்பதால் இன்று கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்கு சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் தொடர்ந்து அதிக அளவில் கூடி வருகின்றனர். அதிகாலையில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Also read: புதுச்சேரியில் உள்ள கோவிலில் உண்டியல் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்


ஏற்கனவே மீன்கள் விற்பனை செய்ய இடங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலையில், துறைமுகத்தில் வியாபாரிகள் விற்பனை செய்து வருவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலிசார் துறைமுகத்தில் குவிக்கப்பட்டு, வியாபாரிகளையும் பொதுமக்களையும் எச்சரித்து அனுப்பினர்.

துறைமுகத்தில் ஒருவர் கூட சமூக இடைவெளியைக் கூட கடைபிடிக்காமல் மீன்கள் வாங்கி வருவதால் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். மேலும் சிறு வியாபாரிகள் ஒருசிலர் அனுமதி மீறி துறைமுகத்திலே மீன்கள் விற்பனை செய்து வருவதால் அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் கொரோனோ தொற்று அதிகரிக்கும் என பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading