Home /News /national /

பாஜக மாநில தலைவர் மனைவியிடம் 85 பவுன் நகை மோசடி - நெருங்கிய தோழிக்கு புதுச்சேரி போலீஸ் வலை வீச்சு

பாஜக மாநில தலைவர் மனைவியிடம் 85 பவுன் நகை மோசடி - நெருங்கிய தோழிக்கு புதுச்சேரி போலீஸ் வலை வீச்சு

மனைவியுடன் பாஜக மாநில தலைவர்

மனைவியுடன் பாஜக மாநில தலைவர்

Puducherry : புதுச்சேரியில், பாஜக மாநில தலைவர் சாமிநாதனின் மனைவி விஜயலட்சுமியிடம் நகை மோசடியில் ஈடுபட்ட நெருங்கிய தோழியை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டை புது தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். பாஜக மாநில தலைவர். இவரின் மனைவி விஜயலட்சுமி. இவரிடம் வாணரப்பேட்டையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் பாபு என்பவரின் மனைவி விஜயகுமாரி பள்ளி காலத்து தோழி. விஜயலட்சுமியின் குடும்பத்தில் ஒருவராக விஜயகுமாரி இருந்துள்ளார். குடும்ப நிகழ்ச்சிகளை தானே முன்னின்று விஜயகுமாரி நடத்தி வந்ததால் அவர் மீது விஜயலட்சுமிக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாகப் பயன்படுத்தி விஜயகுமாரி தனது மகளின் படிப்பு செலவுக்காவும், அவசர தேவைக்காகவும் விஜயலட்சுமியிடம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 வரை சிறுகச்சிறுக 100 பவுன் நகை வாங்கியுள்ளார். அவற்றை விஜயகுமாரி புதுச்சேரியில் முத்தூட் தனியார் நிதி நிறுவனத்தில் 9 பெயர்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பிறகு அந்த நகையை விஜயகுமாரி மீட்டு விஜயலட்சுமியிடம் கொடுக்கவில்லை. இது விஜயலட்சுமியின் கணவருக்கும் தெரியாது.

இதனிடையே, விஜயலட்சுமியின் மகளுக்கு திருமணம் ஏற்பாடாகியதால் நகையை திருப்பி கொடுக்குமாறு விஜயகுமாரிடம் விஜயலட்சுமி கேட்டுள்ளார். ஆனால், நகையை திருப்பி கொடுக்காமல் விஜயகுமாரி காலம் கடத்தி வந்துள்ளார். 15 பவுனை மட்டும் திரும்ப கொடுத்து தனது தொடர்பை துண்டித்துள்ளார்.



Must Read : பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா?... இன்று முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

இந்நிலையில், விஜயகுமாரி தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் திடீரென தலைமறைவானார். இதனால், நகை மோசடி செய்யப்பட்டதை அறிந்து விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி  என  வழக்குப் பதிவு செய்து தலைமறைவான விஜயகுமாரியை தேடி வருகின்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Fraud, Gold, Puducherry

அடுத்த செய்தி