புதுவையில் சுற்றுலா பயணிகள் விரும்பும் பிரஞ்சு ஆம்லெட்!

புதுவையில் சுற்றுலா பயணிகள் விரும்பும் பிரஞ்சு ஆம்லெட்!
  • Share this:
பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஒரு பகுதிதான் புதுச்சேரி. சுமார் 200 ஆண்டுகள் பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்கள் விட்டு சென்ற உணவு முறை இன்றளவும் புதுச்சேரியில் உள்ளது. குறிப்பாக சாலட் நிக்கோஸ், பேத் தி பியோ கிராஸ், கிரீஸ் கேரமால், பிரஞ்சு பிங்கர் உள்ளிட்டவை புதுச்சேரியில் கிடைக்கும்.

அதில் இன்றளவும் பொதுமக்கள் அதிகம் உண்ணும் உணவு பிரஞ்சு ஆம்லெட்.

பிரஞ்சு ஆம்லெட் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் கருவை வேகவைத்தும், வெள்ளை கருவை அடித்து அதன் நுரையை மேலே வைத்து பரிமாறுவது ஒரு முறையாகவும், வெள்ளை கரு, மஞ்சள் கரு இரண்டையும் அடித்து வெண்ணை கொண்டு ஆம்லெட் தயாரித்து, அதனுள் இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான காளான் , குடைமிளகாய், சீஸ் (பாலாடை ), கேரட் , தக்காளி உள்ளிட்டவைகளை வைத்து பரிமாறுகின்றனர்.
வரும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கே வந்தால் இந்த பிரஞ்சு ஆம்லெட் -யை விரும்பி சாப்பிட்டு செலகின்றனர்.Loading...

காலத்திற்கேற்ப உணவுகள் மாறினாலும் பிரஞ்சு கலாசாரத்தின் வெளிப்பாடாய் இன்றளவும் பிரஞ்சு ஆம்லெட் உள்ளது. உணவை வைத்தே கலாசாரத்தின் வெளிப்பாட்டை அறிய முடியும் என்பதில் பிரஞ்சு ஆம்லெட் இன்றளவும் புதுச்சேரியில் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: December 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...