பிரான்ஸ் தேசிய தினம்: கொரோனா காரணமாக புதுவையில் மின்விளக்கு ஊர்வலம் ரத்து..

பிரான்ஸ் தேசிய தினமான இன்று கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்சு துணைத் தூதர் காத்ரின் ஸ்வாட், மாவட்ட ஆட்சியர் ஆருண் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பிரான்ஸ் தேசிய தினம்: கொரோனா காரணமாக புதுவையில் மின்விளக்கு ஊர்வலம் ரத்து..
பிரான்ஸ் தேசிய தினமான இன்று கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்சு துணைத் தூதர் காத்ரின் ஸ்வாட், மாவட்ட ஆட்சியர் ஆருண் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
  • Share this:
கடந்த 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியையும் பாரிஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையையும் மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். அதைத்தான் பிரஞ்சுப் புரட்சி என்கிறோம். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர். இத்தினத்தை நினைவுகூறும் வகையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ஆம் தேதி பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். அந்த அடிப்படையில் புதுச்சேரியில் நேற்று இரவு நடைபெற இருந்த மின்விளக்கு ஊர்வலம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இன்று கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்சு துணைத் தூதர் காத்ரின் ஸ்வாட், மாவட்ட ஆட்சியர் ஆருண் ஆகியோர் மரியாதை செலுத்தினர். கொரோனா காரணமாக இதில் பிரெஞ்சு ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் என யாரும் பங்கேற்கவில்லை. ஒருசிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக இன்று இரவு, வழக்கமாக கடற்கரைச் சாலையில் நடைபெறும் வானவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading