புதுச்சேரியில் அறுந்துக் கிடந்த மின் கம்பியில் சிக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

புதுச்சேரியில் உள்ள கிராமத்தில் அறுந்துக் கிடந்த மின் கம்பியில் சிக்கி 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

புதுச்சேரியில் அறுந்துக் கிடந்த மின் கம்பியில் சிக்கி 4 மாடுகள் உயிரிழப்பு
அறுந்துக் கிடந்த மின் கம்பியில் சிக்கி 4 மாடுகள் உயிரிழந்துள்ளன.
  • Share this:
புதுச்சேரியின் தொண்டமாநத்தம் கிராமத்தின் சவுக்குத் தோப்புப் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் மாடுகள் மேய்வது வழக்கம். இதேபோல் நேற்று மதியம் குப்புசாமி, மங்கலட்சுமி, முருகன், மதியழகன் ஆகியோரது மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

Also read: சென்னையில் பழைய பைக் மற்றும் கார் விற்பனை 20 - 30% அதிகரிப்பு

மாலை வழக்கம் போல் இவை தானாக வீடு திரும்பி விடும். ஆனால் நேற்று மாலை வெகு நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்கள் சவுக்குத் தோப்பிற்குச் சென்று தேடினர். அங்கு 4 மாடுகளும் வரிசையாக இறந்துக் கிடந்துள்ளன. சவுக்குத் தோப்பில் அறுந்துக் கிடந்த மின் கம்பியை மாடுகள் மிதித்ததால் இறந்திருப்பது எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறுந்துக் கிடந்த மின் கம்பியில் சிக்கி 4 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading