Home /News /national /

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதி!

covid | தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பு கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதித்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

covid | தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பு கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதித்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

covid | தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பு கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதித்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வீரியமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட வைரஸ் வேரியண்ட்களை காட்டிலும் ஒமைக்ரான் மிக அதிக வேகத்தில் பரவி வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் 6,000க்கும் மேற்பட்டோர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் அதிகம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கேரளா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகின்றன. இதனுடன், கொரோனா 3வது அலை பரவலும் உச்சத்தில் இருந்து வருகிறது.

    Also read:  ஒரே ரன்வேயில் 2 இந்திய விமானங்கள்.. நூலிழையில் விபரீதம் தவிர்ப்பு - துபாய் விமான நிலையத்தில் திக் திக்..

    இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2.68 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 402 பேர் உயிரிழந்துள்ளனர். நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தொற்று பாதிப்பு 16.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இதனிடையே, சமீப நாட்களாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக அவரது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது, லேசான அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டிலே நான் என்னை தனிமைப்படுத்திகொண்டுள்ளேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பு கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதித்து கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் படிக்க: உ.பி சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. யோகி ஆதித்யநாத் எங்கு போட்டி?..
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Narayana samy, Puducherry

    அடுத்த செய்தி