புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான நாராயணசாமி தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்தில் மதவாத சக்திகளுக்கும், பிரிவினைவாத சக்திகளுக்கும் போட்டி நடைபெறுகிறது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தலில் மத்திய பாஜக அரசு தனது அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் புதுச்சேரியில் ஜனநாயக படுகொலை செய்துள்ளது. இருந்தபோதிலும், புதுச்சேரி மக்கள் ஆதரவுடன் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்ற கூறினார்.
Must Read : புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது
இந்நிலையில், புதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.