புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் சூறாவளி - முதன் முறையாக பார்த்த மக்கள்

புதுச்சேரி அரசு நிர்வாகத்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில், முதன்முறையாக சூறாவளி சுழற்காற்று வீசியது, அங்கிருந்தவர்களை வியப்புக்குள்ளாக்கியது.

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் சூறாவளி - முதன் முறையாக பார்த்த மக்கள்
சூறாவளி சுழற்காற்று
  • Share this:
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா கோதாவரி ஆற்றுக் கரையில் உள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

இன்று மதியம் ஒரு மணிக்கு ஐயன் நகர் என்ற பகுதியில் திடீரென சூறாவளி காற்று புயல் கிளம்பியது. இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

Also read... முழு கொள்ளளவை எட்ட உள்ள வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி


இந்தப் பகுதியில் மீன் மற்றும் இறால்கள் வளர்க்கப்படுவதால் சூறைக்காற்றுடன் இவை  அல்லி செல்லப்பட்டன. இந்த காட்சிகளையும் அங்கு பண்ணையில் வேலை செய்பவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த திடீர் சூறை புயல் காற்றால் ஏனாம் பகுதியில் விவசாய நிலங்கள் , மீன் மற்றும் இறால் பண்ணைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading