புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், விவசாயிகளை வஞ்சிக்கின்ற சட்டங்களை மத்திய அரசு கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் மத்திய உணவு கழகம் மூடப்படும் அபாயம் உள்ளது என குற்றம்சாட்டினார். ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுச்சேரி-காரைக்காலுக்குரிய இட இதுக்கீட்டு வழக்கம் போல் தொடரும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எந்த மாற்றமும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசியவர், புதுச்சேரியில் மின்கட்டணத்தை உயர்த்தும் பணியை மத்திய அரசின் மின்சார ஒழுங்கு முறை ஆணையம்தான் செய்கிறது.இது தெரியாமல் பாஜக மத்திய அரசையே எதிர்த்து போராடுகின்றனர். கொரோனா காரணமாக சில மாதங்கள் நுகர்வோருக்கு மின் கட்டண ரசீது வழங்கப்படவில்லை. தற்போது அனைத்து மாதங்களுக்கும் கட்டணம் நிர்ணயித்து இருப்பதால் அதிகமாக தெரியும். அதிலும் குழப்பம் இருந்தால் அரசு அதனை சரி செய்யும் என்றும் முதல்வர் நாராயணசாமி உறுதியளித்தார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.