Black Fungus | புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு

கருப்பு பூஞ்சை பாதிப்பு

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த தேவன் என்பவருடைய மனைவி எழிலரசி கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தார்.
    ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழிந்தார். புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இது.

    இதனிடையே கொரோனாவிற்கு மேலும் ஒரு செவிலியர் பலியாகியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில் கோரிமேடு
    பிரியதர்ஷினி நகரை சேர்ந்த 45 வயதுமிக்க சசிபிரபா, ஜிப்மர் மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

    புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு


    மேலும் படிக்க... திண்டுக்கல்:காய்கறி மார்க்கெட்டில் ஊரடங்கு விதிகளை மீறி குவிந்த மக்கள்

    இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இவருடைய உயிரிழப்பு செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: