CoronaVirus : புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரு மகன்கள் கொரோனாவால் உயிரிழப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் தந்தை மற்றும் இரு மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
புதுச்சேரி மறைமலையடிகள் சாலை துணிக்கடை நடத்தி வருபவர் அபுல் கலால் ஆசாத். இவரது தம்பி சிராஜ். உருளையன்பேட்டை தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு சென்ற இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தார்.

அவரால் தொற்று ஏற்பட்ட அண்ணன் அபுல் கலால் ஆசாத் மற்றும் அவர்களது தந்தை முத்தலிப் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதே போல தேர்தல் பணியாற்றிய துணை தாசில்தார் குமார் கடந்த வாரம் இறந்த நிலையில் அவரது மனைவி லட்சுமி நேற்று கொரோனாவால் உயிரிழந்தார்.

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் கொரோனாவிற்கு 33 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக புதுச்சேரியில் 1,212 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 1,797 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில், மருத்துமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் குறைந்த அளவிலேயே காலியாக இருக்கின்றன.

Must Read : தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

 

புதுச்சேரியில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள 1,428 படுக்கைகளில் 571 காலியாக இருக்கிறது. 1,504 ஆக்சிஜன் படுக்கைகளில் 17 மட்டுமே காலியாக உள்ளது. மொத்தமுள்ள 196 வெண்ட்டிலேட்டர்களும் நிரம்பி விட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
Published by:Suresh V
First published: