முகப்பு /செய்தி /இந்தியா / மின்துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு: வயல்களில் கறுப்புக் கொடியுடன் விவசாயிகள் போராட்டம்

மின்துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு: வயல்களில் கறுப்புக் கொடியுடன் விவசாயிகள் போராட்டம்

மின்துறையைத் தனியார்மயமாக்குவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.

மின்துறையைத் தனியார்மயமாக்குவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.

நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார்மயம் ஆக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புதுச்சேரியில் மின்துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வயல்களில் இறங்கி கறுப்புக் கொடியுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இது சம்பந்தமாக புதுவை முதல்வர் நாராயணசாமியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை சீர்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார்மயமாக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மின்துறையை தனியார்மயமாக்கும் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மேலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை இவை எல்லாம் எங்களுடைய அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.

நாங்கள் மின்சாரத்தை விநியோகம் செய்யும் உரிமையை மாநில அரசின் கையில் வைத்துள்ளோம். இதனை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இது சம்பந்தமாக மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியை அடுத்த சந்தைபுதுக்குப்பம் கிராமத்தில் இன்று (மே 19) விவசாயிகள் கறுப்புக் கொடியுடன் நெல் வயல்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, ”மத்திய அரசு மின்துறையை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

தற்போது இலவச மின்சாரம் பெறும் நிலையிலேயே விவசாயப் பயிர்கள் பெருமளவு பாதித்து, நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து விவசாயத்தில்  ஈடுபட முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. எதிர்காலங்களில் விவசாயம் தழைக்குமா என்ற கேள்வியும் இருந்து வருகிறது. வங்கிகளில் பெற்ற கடன் தொகை கட்ட முடியாமல் போகும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Electricity, Farmers Protest, Minister Nirmala Seetharaman