புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு குடும்பமே தீக்குளிக்க முயற்சி

நிலப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து ஆளுநர் மாளிகை முன் தீக்குளிக்க முயற்சித்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு குடும்பமே தீக்குளிக்க முயற்சி
தற்கொலைக்கு முயற்சித்த அருளின் குடும்பத்தை போலீசார் கைது செய்த போது
  • Share this:
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்தை புது குப்பம் கிராமத்தில் வசி வசிப்பவர் அருள். இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் ஏற்கனவே அவரது சகோதரர்கள் ஐந்து பேர் வீடு கட்டி உள்ளனர். ஆறாவதாக அருள் வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள்முருகன் தனது ஆதரவாளர்களுடன் வந்து இடம் தனக்கு சொந்தமானது என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

போலிப் பத்திரம் மூலம் தங்களது இடங்களை இவர்கள் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி அருள் மற்றும் அவரது குடும்பத்தார் காவல் நிலையத்திற்கும் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றனர்.

ஆனால் இந்த தடையை மீறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அவரது ஆட்களும் தங்களுக்கு இடத்திற்குள் நுழைந்து தகராறில் ஈடுபடுவதாக அருள் குடும்பத்தினர் தெரிவித்து தங்களுக்கு நீதி வழங்கக்கோரி ஆளுநர் மாளிகை முன்பு தீக்குளிக்கும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.


இதனால் ஆளுநர் மாளிகை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னதாக போலீசார் அவர்களை ரங்கப்பிள்ளை வீதியில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அருள் மற்றும் அவரது அண்ணன் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து ஜீப்பில் ஏற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது குடும்ப பெண்கள் ஜீப்பை மறித்து நின்றதுடன் அதனை துரத்தி ஓடியதால்  சில நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

Also read... ஓராண்டு முடிந்து குழந்தையும் பிறந்தாச்சு - திருமண நிதியுதவி & தாலிக்கு தங்கம் வந்து சேரவில்லை






Also see...
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading