அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.. இல்லையெனில் விவேக் ஆன்மா ஏற்றுக் கொள்ளாது.. புதுச்சேரியில் தமிழிசை வேண்டுகோள்

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.. இல்லையெனில் விவேக் ஆன்மா ஏற்றுக் கொள்ளாது.. புதுச்சேரியில் தமிழிசை வேண்டுகோள்

தமிழிசை

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் போடாமல் இருந்தால் விவேக் ஆன்மா ஏற்றுக் கொள்ளாது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு உதவும் வகையில் புதுச்சேரி அரசின் பாண்லே பால் விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் முகக்கவசம், கிருமிநாசினி விற்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்தார்.  இத்திட்டத்தை ஆளுநர் மாளிகையில் நேற்று தமிழிசை தொடங்கி வைத்தார்.  பாண்லே நிறுவன மேலாண் இயக்குனர் சுதாகர் இதனை பெற்றுக்கொண்டார்.

பின்னர்  தமிழிசை பேசுகையில், கொரோனாவை தடுக்க எளிய வழி முகக்கவசம் அணிவதும், கைகளை சுத்தமாக வைப்பதும்தான். மக்கள் பயன்பெற பாண்லே பாலகத்தில் தரமான முகக்கவசம் ஒரு ரூபாய்க்கும், 50 மில்லி கிருமிநாசினி ரூ.10க்கும் வழங்கப்படும் என்றார். புதுச்சேரியில் தடுப்பூசி போடுபவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் நடிகர் விவேக் மரணத்திற்கு பிறகு பக்க விளைவு ஏற்படும் என்ற தவறான புரிதல், வதந்தியால் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இளைஞர்கள் இதனை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். மக்களிடம் அவநம்பிக்கையை போக்க வேண்டும். நடிகர் விவேக் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊசி போட்டு கொண்டார். ஆனால் அவரது மரணத்தை எண்ணி பயந்து ஊசி போடாமல் இருப்பதை அவரது ஆன்மா ஏற்காது. மக்களின் பாதுகாப்பு கருதி முகக்கவசம் மற்றும் தடுப்பூசிகளை போடுவதற்கு தூதுவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் என தமிழிசை தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் உள்ள பாண்லே பாலக விற்பனை நிலையகங்ளில் மலிவு விலையில் முகக்கவசம் ஒரு ரூபாய்க்கும், 50 மில்லி கிருமி நாசினி 10 ரூபாய் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை முகக்கவசம் அணிந்தால் கொரோனா நோய்த்தொற்றானது பரவாமல் தடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க... Exclusive | தமிழகத்தில் தடையில்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆளுநர் மாளிகையில் துவக்க விழாவில் பாண்லே நிறுவனத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: